மகாராஜா
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யா பாரதி, அபிராமி, சஞ்சனா என பலர் நடிக்க கடந்த ஜுன் மாதம் வெளியான படம் மகாராஜா.
ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 107 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
விஜய் சேதுபதியின் 50வது படம் என்ற கொண்டாட்டத்தோடு வெளியான இப்படம் திரையரங்குகளில் மாஸாக ஓடி வசூல் வேட்டை நடத்தியது.
அடுத்த படம்
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நித்திலன் சுவாமிநாதன் அடுத்து நடிகை நயன்தாரா வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக தகவல் வந்தது.
சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்… பரபரப்பு சம்பவம்
அந்த படத்திற்கு மகாராணி என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், நித்திலன் நயன்தாராவை வைத்து படம் எடுக்க போவது உண்மை எனவும் ஆனால் அந்த படத்திற்கு மகாராணி என பெயர் வைக்கப்பட வில்லை எனவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இயக்குனர் நித்திலன் நடிகர் தனுஷிடம் ஒரு கதையை கூறியதாகவும் விரைவில் இவர்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.