Home இலங்கை சமூகம் யாழ்.மண்ணில் கேட்கும் மாவீரர்களின் குரல்! இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்

யாழ்.மண்ணில் கேட்கும் மாவீரர்களின் குரல்! இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்

0

யாழ்ப்பாண மண்ணில் மாவீரர்களின் குரல் இன்னும் கேட்பதாகவும், இந்த மண்ணில் படம் எடுக்க ஆசையாக இருப்பதாகவும் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் தயாரிப்பில் ஈழத்தில் உருவாகிவரும் “மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்புகளை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் எதிர்ப்பார்த்ததை விட மிகவும் அழகாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் றீகன் பாஸ்கரனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்த இயக்குநர் பாண்டிராஜ் “மில்லர்” திரைப்படம் ஈழத்து சினிமாவுக்கான புதிய மைல்கல்லாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ், தமிழ் சினிமாவில் குடும்பங்களை ஒன்றிணைக்கும் விதமான கதைக்களத்துடன் தனித்துவ படைப்புகளை வழங்குவதில் பிரபல்யமடைந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/OEcmF_bgSYs

NO COMMENTS

Exit mobile version