Home சினிமா அழகான நினைவுகள்.. தன் முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி!

அழகான நினைவுகள்.. தன் முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி!

0

அனுஷ்கா ஷெட்டி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இவர் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பைசன் படம் குறித்து மணிரத்னம் சொன்னது என்ன?.. மாரி செல்வராஜ் உருக்கம்!

ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார், அந்த படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இடையில் உடல் எடை கூடிய அனுஷ்கா ஷெட்டி கேமரா பக்கமே வராமல் இருந்தார்.

பின் அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றது.

அழகான நினைவுகள்! 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தன் முதல் காதல் குறித்து நடிகை அனுஷ்கா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியாது.

ஆனால், அந்த பையன் அதை சொன்னது நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version