Home இலங்கை சமூகம் சிறுவர் தினத்தில் போராட்டத்தில் குதிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்

சிறுவர் தினத்தில் போராட்டத்தில் குதிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்

0

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் வருகின்ற முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனை வடக்கு கிழக்கு
வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி
கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது பல சிறார்கள் செல்விச்சிக்கலாலும் விமான தாக்குதலும்
கொல்லப்பட்டும் பல சிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதும் ஒரு சில சிறார்கள்
இராணுவத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கான நீதி இதுவரையும்
கிடைக்கப்பெறவில்லை.

கவனயீர்ப்பு போராட்டம்

இந்த நிலையில், குறித்த விடயத்தை வலியுறுத்தி சிறுவர் தினத்தை முன்னிட்டு
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை
முன்னெடுக்க உள்ளனர்.

அத்துடன் இந்த போராட்டமானது, கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட
அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

Source: https://ibctamil.com/article/disappeared-people-protest-october-1-sri-lanka-1727536704

NO COMMENTS

Exit mobile version