Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கம்

நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கம்

0

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமொன்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவசரநிலை எதுவாக இருந்தாலும் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின் தடைகள்

இதேவேளை, மின் தடைகள் ஏற்பட்டால் 1987 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version