மழையினால் ஏற்படும் வெள்ளம் மற்றும் பிற பேரிடர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க கூறியுள்ளார்.
மேலும் இவை நீர்ப்பாசன பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
பொறியாளர்களின் பொறுப்பு
இதன்படி எதிர்கால மழையின் அடிப்படையில் நீர்த்தேக்கங்கள் காலியாகுமா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை அகற்றுவது பொறியாளர்களின் பொறுப்பு என்றும், ஏதேனும் தவறு நடந்தால் அந்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மகிந்த ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
