இராகலை மண்சரிவு
நுவரெலியா இராகலை பிரதான பாதையில் கடந்த 27.11.2025 அன்று இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேர் மண்ணில் புதையுன்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை 30.11.2025 முதல் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செய்தி – சுப்பிரமணியம்
ஹங்குரன்கெத்த பாதை
நுவரெலியா வலப்பனை ஊடாக ஹங்குரன்கெத்த பாதை முற்றாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இரண்டு இடங்களில் ஏற்பட்டு பாரிய மண் சரிவு காரணமாக பொது மக்களின் பாது காப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல இடங்களிலும் சிறிய மண் சரிவுகள் எற்பட்ட பொழுதிலும் அவற்றை பாதை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேச சபை இணைந்து அவற்றை அப்புறப்படத்திய பொழுதும் இந்த மண்சரிவை உடனடியாக அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த பாதை முற்றாக மூடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிலை
அதே நேரம் பாதையின் பல இடங்களிலும் இடிந்த நிலையில் இருப்பதால் பாதை போக்குவரத்திற்கு உகந்த நிலையில் இல்லை.
அதே நேரம் நாளை 01.12.2025 குறித்த பகுதியில் மண்சரிவு அகற்றப்பட்டு ஒரு பகுதியில் மாத்திரம் போக்குவரத்திற்கு திறப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். எனினும், இது தொடர்பாக உறுதிப்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றார்கள்.
செய்தி – சுப்பிரமணியம்
