Home இலங்கை அரசியல் சர்ச்சையில் சிக்கிய மனோ கணேசன்.! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சஜித் தரப்பு

சர்ச்சையில் சிக்கிய மனோ கணேசன்.! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சஜித் தரப்பு

0

இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பல சக்திவாய்ந்த செயற்பாட்டாளர்கள் அதன் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

கடுமையான ஒழுக்க மீறல்

கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பேன் என்று கூறிய அவர், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது கடுமையான ஒழுக்க மீறல் என்று செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் மனோ கணேசன் தோல்வியடைந்த போதிலும், அவர் மீது மிகுந்த நம்பிக்கையுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டதாக கட்சி செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version