Home முக்கியச் செய்திகள் அறிவியலின் உச்சம் – மனிதர்கள் வாழக் கூடிய மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு!

அறிவியலின் உச்சம் – மனிதர்கள் வாழக் கூடிய மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு!

0

மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது.

குறித்த கிரகமானது, சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கூறுகள் 

பூமியை விட எட்டு மடங்கு பெரியதும், 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதுமான K2-18b, டைமெத்தில் சல்பைடு என்ற தனித்துவமான மூலக்கூறின் அறிகுறிகளைக் காட்டுவதாக கண்டறிந்துள்ளனர்.

K2-18b என்ற இந்த எக்ஸோப்ளானெட் ஒரு “ஹைசியன் கிரகம்” என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள், அதாவது, கடல் பாசிகள் போன்ற உயிரினங்களால் மட்டுமே பூமியில் உற்பத்தி செய்யப்படும் ஒன்று உட்பட ஏராளமான உயிர்களைக் குறிக்கும் மூலக்கூறுகள் இதில் உள்ளன என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், இது ஒரு புரட்சிகரமான தருணம் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியலாளரும் இந்த ஆய்வின் ஆசிரியருமான கலாநிதி நிக்கு மதுசூதன் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு

மதுசூதனும் அவரது குழுவினரும் 2023 ஆம் ஆண்டு K2-18b இல் டைமெத்தில் சல்பைட்டின் வளிமண்டல அளவீடுகளை எடுத்ததாக அறிவித்தனர் – மேலும் கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட சோதனைகளில் மூலக்கூறின் அதிகப்படியான இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, இவை நாம் காணும் வேற்றுகிரக உலகத்தின் முதல் குறிப்பு என்றும் அதில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் மதுசூதன் கூறியுள்ளார். 

 

https://www.youtube.com/embed/T5RFeBA_PEQ

NO COMMENTS

Exit mobile version