Home இலங்கை அரசியல் சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு : அதிரடியாக தூக்கப்படும் பிள்ளையானின் சகாக்கள்

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு : அதிரடியாக தூக்கப்படும் பிள்ளையானின் சகாக்கள்

0

பிள்ளையானின் கைதை தொடர்ந்து மட்டக்களப்பு, முழுமையாக மிக தீவிரமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டாம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

2006 ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பிள்ளையான் தரப்பில் வழக்கறிஞராக உதய கம்மன்பில களமிறங்கிய நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்தநிலையில், தற்போது மட்டக்களப்பில் உலாவும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மீது குற்றப்புலனாய்வு பிரிவினரின் பார்வை திரும்பியுள்ளது.

இதன்தொடர்ச்சியாக பிள்ளையானின் சாரதியாகச் செயற்பட்ட நபர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இதனுடன் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இந்த கைது தொடர்பிலும் பிள்ளையானின் அரசியல் எதிர்காலம் மற்றும் கைதின் முக்கிய காரணி என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/ywY770OpRuI?start=135

NO COMMENTS

Exit mobile version