Home இலங்கை அரசியல் கொள்கலன் போக்குவரத்துப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

கொள்கலன் போக்குவரத்துப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

0

கொழும்புத் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள கொள்கலன் போக்குவரத்துப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தடங்கல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version