Home இலங்கை அரசியல் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டை முன்னிட்டு கருத்தமர்வு

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டை முன்னிட்டு கருத்தமர்வு

0

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் தமிழாராய்ச்சி மகாநாட்டுப்
படுகொலைகளின் 51ம் ஆண்டு நினைவு தினத்தினை அடுத்து அது தொடர்பான கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த கருத்தமர்வானது நேற்றையதினம்(13) இங்கிருந்து எங்கே? என்னும் தலைப்பில் யாழ். திவ்விய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கருத்தமர்வு

இந்த நிகழ்வில் கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை
மதன், கலாநிதி க.சர்வேஸ்வரன், சந்திரகாசன் இளங்கோ, தமிழ் தேசிய பசுமை
இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.

அத்தோடு, நிறைவுரையினை தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் என். ஸ்ரீகாந்தா ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version