Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து விசேட கூட்டம்!

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து விசேட கூட்டம்!

0

கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட உள்ள 33 முன்மொழியப்பட்ட திட்டங்களை மீள் ஆய்வு செய்வதற்கான விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த திட்டங்கள், இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 2.3 பில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

விசேட கூட்டம்

இது தொடர்பிலான விசேட கூட்டம், திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (14) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறை சார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  

NO COMMENTS

Exit mobile version