Home இலங்கை சமூகம் யாழ். மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பான
கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரச அதிபர், ஏற்கனவே
கிராம ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 70 புலம்பெயர் தொழிலாளர் சங்கங்கள்
காணப்படுகின்றன.

வெளிநாடுகளுக்குச் செல்வோா்

அதன் வெளிப்பாடாக மாவட்ட மட்டத்தில் புலம்பெயர்
தொழிலாளர் சங்கம் உருவாக்குதலை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல்
நடைபெறுகின்றது.

மேலும் வெளிநாடுகளுக்குச் செல்வோா் அதிகமாகக் காணப்படுகின்றது எனவும்,
உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தல் குறைவாகவே உள்ளது.

இதன் நோக்கத்தைச்
சரியான முறையில் அடையாளப்படுத்தி நலன்சாா் விடயங்களைச் செயற்படுத்துவதற்குப்
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர் சங்கம் 

புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட புலம்பெயர் தொழிலாளர்
சங்கத்துக்குத் தனது வாழ்த்துக்களையும் மாவட்ட அரச அதிபர் இதன்போது
தெரிவித்தாா்.

இந்தக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அபிவிருத்தி உத்தியோத்தர், பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி
உத்தியோகத்தர், பிரதேச செயலக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும்
செயலாளர், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,
வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள், வெளிநாடு செல்லவுள்ள நபர்கள்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version