Home இலங்கை சமூகம் யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடற்றொழில் வான் புனரமைத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடற்றொழில் வான் புனரமைத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

0

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடற்றொழில் வான் புனரமைத்தல் தொடர்பான
கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்று (20) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, புதிதாக அமைக்கப்படவுள்ள கடற்றொழில் வான் புனரமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள
கடற்றொழில் வான் திருத்துதல் தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டன.

அறிவுறுத்தல்கள்

அத்தோடு, இது தொடர்பான உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதற்கான
நிதியினை சிறந்த முறையில் பயன்படுத்துதல் தொடர்பாகவும் அரசாங்க அதிபர்
அவர்களால் உரிய தரப்பிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.
ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கடற்றொழி்ல் திணைக்கள உதவிப்
பணிப்பாளர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர், மாவட்ட பிரதி
திட்டமிடல் பணிப்பாளர், தெல்லிப்பளை மற்றும் சங்கானை பிரதித் திட்டமிடல்
பணிப்பாளர்கள், UNDP நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்
உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version