Home இலங்கை அரசியல் தமிழ் முஸ்லிம் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்

தமிழ் முஸ்லிம் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்

0

வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை
கட்டியெழுப்பும் நிகழ்வு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும்
முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதய சுத்தி

தமிழ் முஸ்லிம் மக்களிடம்
நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக
இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்த்துக்கொள்ள இதய சுத்தியுடன்
முன்வர வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில்
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், சமூக செயற்பாட்டாளர் செல்வின், சிரேஷ்ட
சட்டத்தரணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலூக், மொகைதீன் நிறைவேற்றுப் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.  

NO COMMENTS

Exit mobile version