Home இலங்கை சமூகம் யாழில் பல்கலை மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்

யாழில் பல்கலை மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்

0

சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை
அணிதிரட்டுதல் என்ற பிரதான நோக்குடனான கலந்துரையாடலொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம்(24.01.2025) யாழ்ப்பாணம் மேலதிக
அரசாங்க அதிபர்(காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், சமூக நல்லிணக்கத்தினை
ஏற்படுத்தும் முகமாக அரசாங்க உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில், பல்கலைக்கழக
மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வானது உண்மைத்தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

யதார்த்தபூர்வமான ஆய்வுகள்

அத்துடன், மாணவர்கள் ஆய்வினை மேற்கொள்ளும் போது, உண்மையான தரவுகளை திரட்டி
யதார்த்தபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

இந்தக் கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன்
கதிர்காமர், சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணா, சிரேஷ்ட
விரிவுரையாளர் ஸ்ரீகாந்தராஜா சிவகாந்தன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட
இணைப்பாளர் திரு. ந. தயாபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version