Home இலங்கை அரசியல் கஞ்சனவினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணிநியமனம்

கஞ்சனவினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணிநியமனம்

0

முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால்(Kanchana Wijesekera )பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கஞ்சன விஜேசேகர எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த ஜனவரியில் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலைநிறுத்தப் ​போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 பணிநியமனம்

அதன் காரணமாக மின்சார சபையின் செயற்பாடுகளில் பாரிய தடங்கல் ஏற்பட்டிருந்தது.பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இலங்கை மின்சார சபையை துண்டாடி தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டி குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய தொழிற்சங்க பிரமுகர்கள் 62 பேரை அப்போதைய அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணியிடை நீக்கம் செய்திருந்தார்.அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (24) மின்சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி( Kumara Jayakody), குறித்த ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை இரத்துச் செய்து, அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version