Home இலங்கை அரசியல் சமூகத்திற்கு இடையூறாக உள்ளவர்கள் இறப்பது நல்லது : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்கம்

சமூகத்திற்கு இடையூறாக உள்ளவர்கள் இறப்பது நல்லது : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்கம்

0

Courtesy: Sivaa Mayuri

சமூகத்திற்குத் தொந்தரவாக உள்ளவர்கள் இறப்பது நல்லது எனக் கூறி, உணவுத் தவிர்ப்பு போராட்டத்தைத் தொடருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சிவில் அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பொதுச் செயலாளர் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், நேற்று (17) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றனர்.

இதன்போது, தேர்தல் திகதியை அறிவிக்குமாறு கோரி சிவில் அமைப்பு ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக போராட்டம் நடத்தியது.

வேட்பாளர்கள் 

இது குறித்து கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாட்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது முதல் தடவையல்ல.

1991இல் உள்நாட்டு கலவரம் காரணமாக ஒரு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, இதன் போது 1,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொல்லப்பட்டனர்.

2005இல் திட்டமிடப்பட்ட ஜனாதிபதி தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

உணவுத் தவிர்ப்பு போராட்டம்

எனினும் நாடு வங்குரோத்து நிலையில் இருக்கின்ற போதிலும், இந்த தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று அபேவர்தன உறுதியளித்தார்.

இதன்போது, ​​சில சிவில் ஆர்வலர்கள் குறுக்கிட்டு, உண்வுத் தவிர்ப்பு  போராட்டத்தை நிறுத்த வேண்டுமா என்று கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த  ரங்கே பண்டார, சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்த வேண்டாம் எனத் தெரிவித்தார்.

அத்துன் , சமூகத்திற்கு இடையூறாக உள்ளவர்கள் இறப்பது நல்லது எனவும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version