Home இலங்கை அரசியல் கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மாவட்டத் தேர்தல்  அதிகாரிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி கொழும்பில் (Colombo) முக்கியமான கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள்

இதன்போது வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் பணிகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.

தேர்தலுக்கான சுமுகமான மற்றும் திறமையான திட்டத்தை இந்த கூட்டம் உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/district-election-officers-meeting-in-colombo-1725692171

NO COMMENTS

Exit mobile version