Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் ரவிகரன் எம்பி முன்வைத்த கோரிக்கை

நாடாளுமன்றில் ரவிகரன் எம்பி முன்வைத்த கோரிக்கை

0

டித்வா புயலினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில்
ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் நாடாளுமன்றில் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று (19.12.2025) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

நிரந்தர தீர்வு 

சுனாமி, டித்வா என்று தொடரும் பேரனர்த்தங்களுக்கும் மேலாக ஒவ்வோராண்டும்
ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்படல், சொத்தழிவு
ஏற்படல் உள்ளிட்டவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என கோரினார். 

அதேவேளை மிகவும் கடுமையாக தித்வாபுயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு
மாவட்டத்தில் குளச்சேதங்களுக்கான நிரந்தரத்தீர்வு உள்ளிட்டவற்றுக்கு அரசின் 2026 பாதீடு
வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கோரிக்கையும்
விடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version