Home இலங்கை அரசியல் அநுர எதிர்க்கட்சியில் இருந்த போது பேசியவற்றை ஜனாதிபதி ஆனதும் மறந்துவிட்டார்..!

அநுர எதிர்க்கட்சியில் இருந்த போது பேசியவற்றை ஜனாதிபதி ஆனதும் மறந்துவிட்டார்..!

0

‘ டிட்வா’ புயலின் பின்னர் அனர்த்த முகாமைத்துவ
சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டார்களா என்ற கேள்வியெழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேரியல் இஸ்மாயில் அஷ்ரப் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தரவுகளின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்.

2005 ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.அதே ஆண்டு மே மாதமளவில் நாடாளுமன்றத்தில் அனர்த்தம் சம்பந்தமான ஒரு சட்டத்தை உருவாக்கினார்கள்.

அந்தவகையில் அனர்த்த முகாமைத்துவ சட்டம் அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் இம்முறை ‘டிட்வா’ புயலில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் அந்த சட்டத்தினூடாகதான் செயற்பட்டார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க் கட்சியில் இருந்தார்.

அப்போது இந்த சட்டம் தொடர்பில் நீண்ட நேரம் உரையாற்றிய அநுர கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் அவர் ஜனாதிபதியாகிய பின்னர் அதன்படி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..

NO COMMENTS

Exit mobile version