Home முக்கியச் செய்திகள் யாழ். வந்த சரிகமப குழு : நாளை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு

யாழ். வந்த சரிகமப குழு : நாளை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு

0

யாழில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப பாடகர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்

பலாலி விமான நிலையம் ஊடாக இவர்கள் இன்றைய தினம் (21.06.2025) யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.

ஜீ தமிழ் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா உடன் “சரிகமப லிட்டில் சாம்ஸ்” பாடகர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜூன் 22ஆம் திகதி மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார வெளி அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த இசை நிகழ்வில் பங்கெடுப்பதற்காக தொகுப்பாளினி அர்ச்சனா “சரிகமப லிட்டில் சாம்ஸ்” பாடகர்கள் மற்றும் ஜீ தமிழ் புகழ் “சதீஷ் இசைக்குழு” ஆகியோர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

 

NEWS : Kajinthan  

[TSBJ2SY]

[PJ9TL90]


https://www.youtube.com/embed/_NBIMzE7_7I

NO COMMENTS

Exit mobile version