Home இலங்கை அரசியல் டக்ளஸிற்கு எதிராக சிறிதரன்! கடும் கோபத்தில் சுமந்திரன்

டக்ளஸிற்கு எதிராக சிறிதரன்! கடும் கோபத்தில் சுமந்திரன்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை அண்மையில் முன்வைத்திருந்தார்.

கடந்த 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில், மண்டைதீவு, மன்கும்பான், அல்லைப்பிட்டி கொலைகள் மற்றும் மனிதப் புதைகுழி விவகாரங்களில் டக்ளஸ் தேவானந்தா உடந்தையாக இருந்ததாக சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.

60க்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கொலைகளுக்கு டக்ளஸ் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம். ஏ சுமந்திரன் சார்பான சில தரப்புக்கள் அண்மையில் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் முனைப்புடன் டக்ளஸின் கட்சி அலுவலகத்தை நோக்கி விரைந்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது சுய இலாபங்களுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியினை பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் காரணமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய அடையாளமாக காணப்படும் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் இரு வெளிப்பாடுகள், இரு எதிர்பார்ப்புகள், இரு திசைகள் காணப்படுவதாக விமர்சனங்கள் வலுத்துள்ளன.

இவ்வாறன பின்னணியில் டக்ளஸின் ஆதரவை எதிர்க்கும் சிறீதரனின் நிலைபாடுகள் என்ன?

டக்ஸுடன் கைகோர்க்க நகர்ந்த சுமந்திரனின் திட்டங்கள் என்ன? என்பதை விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version