Home சினிமா ஒரே காரில் ஜோடியாக வந்து விவாகரத்து கேட்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி! நீதிமன்றத்தில் என்ன நடந்தது

ஒரே காரில் ஜோடியாக வந்து விவாகரத்து கேட்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி! நீதிமன்றத்தில் என்ன நடந்தது

0

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் விவாகரத்தை அறிவித்தனர்.

அவர்கள் பிரிவதாக அறிவித்தாலும் concertகளில் ஒன்றாக பாடி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அது பற்றி கேட்டபோது “நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்” என தெரிவித்தார் ஜி.வி. பிரகாஷ்.

ஒரே காரில் கோர்ட்டுக்கு..

இந்நிலையில் அவர்களது விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்தனர்.

பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாக நீதிபதியிடம் அவர்கள் கூறிய நிலையில் விசாரணை முடிந்து ஒன்றாக காரில் ஏறி கிளம்பி சென்றனர்.

விவாகரத்து பெற ஜோடியாக அவர்கள் வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version