Home சினிமா தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்! லிஸ்ட் இதோ

தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்! லிஸ்ட் இதோ

0

விடுமுறை நாட்களை குறிவைத்து டிவி சேனல்களில் புதுப்புது படங்கள் திரையிடப்படுவது போலவே, ஓடிடியிலும் பல லேட்டஸ்ட் படங்கள் வருகின்றன.

அப்படி எந்த ஓடிடியில் என்ன படம் வருகிறது என விரிவாக பார்க்கலாம்.

அமேசான் ப்ரைம் – தணல்

அதர்வா நடிப்பில் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவான படம் தணல். இந்த படம் இன்று 17 அக்டோபர் அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

மேலும் ‘என் காதலே’, ‘நறுவீ’ ஆகிய புது தமிழ் படங்களில் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன.

ஆஹா தமிழ்

வெற்றி, தம்பி ராமையா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் ‘முதல் பக்கம்’ என்ற திரில்லர் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சோனி Liv

ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் Mirage படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சிம்ப்ளி சவுத்

மாயபுத்தகம் என்ற படம் சிம்ப்ளி சவுத் தளத்தில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சன் நெக்ஸ்ட்

மட்டக்குதிரை என்ற படம் சன் நெக்ஸ்ட்டில் வெளிவந்திருக்கிறது.

 

NO COMMENTS

Exit mobile version