Home முக்கியச் செய்திகள் இலங்கை காவல்துறைக்கு இன்டர்போல் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை காவல்துறைக்கு இன்டர்போல் விடுத்துள்ள அறிவிப்பு

0

குற்றங்களை எதிர்த்துப் போராட இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளைப் இன்டர்போல் பாதுகாப்பு அமைப்பு பாராட்டியுள்ளது.

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 25 இலங்கை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து திருப்பி அனுப்புவதில் இலங்கை காவல்துறைக்கு உதவுவதாக இன்டர்போல் அறிவித்துள்ளது.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து துபாய் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை மாற்றத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்டர்போல் நடவடிக்கை

எனினும், அவர்கள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, காவல்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 25 குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய இன்டர்போல் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version