பிலிப்பைன்ஸில் (Philippines) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் இன்று (17.10.2025) 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானது.
குலுங்கிய கட்டிடங்கள்
இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கினாலும், எந்தவிதமான சேதமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம், மிண்டானாவோ தீவின் கிழக்கு பகுதியில் 7.4 மற்றும் 6.7 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.