Home இலங்கை சமூகம் கடலுக்கு செல்ல வேண்டாம்….! திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடலுக்கு செல்ல வேண்டாம்….! திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

மறுஅறிவிப்பு வரும் வரை ஆழ்கடல் பகுதிகளுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டாம் என கடல் மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலை காரணமாகவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் 

மத்திய வங்கக்கடலை சுற்றியுள்ள கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 2 நாட்களில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் எனவும், கடற்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version