Home இலங்கை சமூகம் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் : விசாரணைகள் தீவிரம்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் : விசாரணைகள் தீவிரம்

0

கொழும்பு (Colombo) – பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதன்போது வான், கெப் மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய 3 வாகனங்களே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீயை அணைக்க முயற்சித்தபோது, அதற்குள் மூன்று வாகனங்களும் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

அத்துடன் இந்த வீட்டை சுற்றியுள்ள காணி பகுதிக்குள் வெளிநபர்கள் எவரும் நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/vehicles-caught-fire-suddenly-police-investigation-1725688334

NO COMMENTS

Exit mobile version