Home இலங்கை சமூகம் வவுனியாவில் ஜனாதிபதி ரணிலை ஆதரித்து பிரச்சாரம்

வவுனியாவில் ஜனாதிபதி ரணிலை ஆதரித்து பிரச்சாரம்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்து வவுனியா (Vavuniya)  நகரில் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்றையதினம் (07) இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் (K. Kader Masthan) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பிரச்சார நடவடிக்கை

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எமது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதனை அவதானிக்கின்றோம்.

அவர் அதிக பெரும்பாண்மையான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார். வீழ்ச்சியடைந்த நாட்டினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அவர் மிக விரைவாக மீட்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நாடளாவிய ரீதியில் இன்றையதினம் பிரச்சார நடவடிக்கைக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

Source: https://ibctamil.com/article/vavuniya-campaigned-in-support-of-president-ranil-1725689665

NO COMMENTS

Exit mobile version