Home இலங்கை சமூகம் யாழில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்திய சோழன் உலக சாதனையாளர்

யாழில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்திய சோழன் உலக சாதனையாளர்

0

யாழ்ப்பாணம் – தென்மராட்சியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிரேம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர்தூரம் தனது இரண்டு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.

யாழ்.கொடிகாமம்,  ஏ9 வீதியில் நேற்று (25-08-2024) காலை 9.00 மணியளவில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

1500 கிலோமீற்றர் எடையுள்ள வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கெளரவிக்கப்பட்டுள்ளார்.

சோழன் உலக சாதனை

இதற்கு முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

Source: https://tamilwin.com/article/shellia-thiruchelvam-new-record-in-jaffna-1724671521

NO COMMENTS

Exit mobile version