Home முக்கியச் செய்திகள் வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை

0

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) நிபந்தனையின் அடிப்படையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் (Chavakacheri Magistrate Court) கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது.

முன்னாள் வைத்திய அத்தியட்சகர்
வைத்தியர் அர்ச்சுனா, தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை, சமூக
ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி
வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை

குறித்த வழக்கில் வைத்தியர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த
வழக்கு விசாரணையின் போது, பிணை நிபந்தனைகளை மீறியமை, ஆதாரங்களை சமர்ப்பிக்க
தவறியமை உள்ளிட்ட காரணங்களால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சுனாவின் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம்
மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அதற்கான கட்டளை நாளைய தினம்
வியாழக்கிழமை வழங்கப்படும் என மன்று திகதியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் புதன்கிழமை மீண்டும் நகர்த்தல் பத்திரம் மூலம்
மன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், வைத்தியர் இனி வரும்
காலங்களில் பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில்
இரண்டு ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதி அளித்தது.

அதேவேளை வைத்தியருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வியாழக்கிழமை
மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் – கஜிந்தன் மற்றும் தீபன்

NO COMMENTS

Exit mobile version