Home இலங்கை சமூகம் இலங்கை சுற்றுலாத்துறை வருவாயில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை சுற்றுலாத்துறை வருவாயில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

0

இலங்கையின் (Srilanka) சுற்றுலாத்துறையானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வருவாயில் வீழ்ச்சி

எனவே ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது ஓகஸ்ட் மாதத்தில் வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஓகஸ்ட் 2024 இல் 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version