Home இலங்கை சமூகம் சந்தேக நபர்களின் காணொளிக் காட்சிகளை, குரல் பதிவுகளை வெளியிட வேண்டாம் -விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சந்தேக நபர்களின் காணொளிக் காட்சிகளை, குரல் பதிவுகளை வெளியிட வேண்டாம் -விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் காணொளிக் காட்சிகளை மற்றும் “குரல்
பதிவுகளை” ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த
வேண்டும் என தொழில்முறை இணைய ஊடகவியலாளர் சங்கம், இலங்கை பொலிஸ் மற்றும்
அதிகாரிகளை கோரியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் முறையான செயற்பாட்டை சிறுமைப்படுத்துவதாகவும்,
சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும் அநத சங்கம்
தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கைதுக்குப் பிறகு சந்தேக நபர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி பெறப்பட்ட
வாக்குமூலங்களை வெளியிடுவது சட்ட நடைமுறைகளுக்கு முரணானது எனவும் அந்த சங்கம்
தெரிவித்துள்ளது.

இவ்வாறான பதிவுகள் பொலிசாரின் மறைமுக ஒப்புதலுடன் அல்லது அவர்களின் சொந்த
அதிகாரிகளாலேயே வெளியிடப்படுவதாக நம்புவதாகவும், இது புலனாய்வு அதிகாரிகளின்
தொழில்முறை தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புவதாகவும் சங்கம் குற்றம்
சாட்டியுள்ளது.

சட்ட அமுலாக்க அதிகாரிகளால் இத்தகைய நடத்தை சட்ட மற்றும் நெறிமுறை தரநிலைகளை
மீறுவதாகும் எனவும் அந்தசங்கம் வலியுறுத்தியுள்ளது.

சட்ட விதிகளுக்கு அமையவே அனைத்து கைதுகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட
வேண்டும் எனவும் தொழில்முறை இணைய ஊடகவியலாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version