இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து
விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகளின் அடையாளங்களை அம்பலப்படுத்துவது
அவர்களின் குடும்பங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த
கூறியுள்ளார்.
பாதுகாப்பு குறித்து கேள்வி
விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகளின் முகங்கள் ஊடகங்களுக்கு
வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களின்
பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு
தெரிவித்தார்.
அரசாங்கம் தனது அனுபவமின்மை காரணமாக இவ்வாறு நடந்து கொள்கிறது என்றும் அவர்
கூறினார்.
குற்றக்குழு உறுப்பினர்களின் கைது
குற்றக்குழு உறுப்பினர்களின் கைது குறித்து அரசாங்கம் கொண்டாடுவது அபத்தமானது
என்றும், மாகந்துரே மதுஷ் முந்தைய அரசாங்கத்தின் போது நாட்டிற்கு அழைத்து
வரப்பட்டார், ஆனால் அத்தகைய கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த கூறினார்.
