Home இலங்கை அரசியல் தொடரும் அநுர அரசின் அதிரடி ஆட்டம்! சிக்கப் போகும் பிரபல எதிர்க்கட்சி தலைவர்

தொடரும் அநுர அரசின் அதிரடி ஆட்டம்! சிக்கப் போகும் பிரபல எதிர்க்கட்சி தலைவர்

0

எதிர்க்கட்சியின் பிரபலமான தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அநுர அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் வழக்கு தொடர்பாக குறித்த அரசியல்வாதி கைது செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் அமைச்சராக இருந்தபோது, ​​அமைச்சின் ஊழியர்கள் குழுவை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிறைய ஆதாரங்கள்

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் குழுவிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறைத்தண்டனை 

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியின் பிரபலமான தலைவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. மேலும் அமைச்சின் செலவுகள் தொடர்பிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்வேறு ஊழல் வழக்குகளுக்காக இந்த ஆண்டு 10 அரசியல்வாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version