எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த விடயத்தை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் எங்கே அமர வேண்டும் என்று கேட்ட போது, எங்கும் அமரலாம் என தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்
பிறகு முன்னே சென்று அமர்ந்தேன், எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என நான் நினைத்தேன்.
இதையடுத்து, நால்வர் இது எதிர்க்கட்சித் தலைவர் தினமும் அமரும் இடம் என தெரிவித்தனர்.
நான் அந்த கதிரையில் போய் அமர எந்த காரணமும் இல்லை அத்தோடு நான் வேண்டுமென்றே போய் அமரவில்லை, அதனால் எங்கு அமர்வது எப்படி செல்வது என்று தெரியவில்லை.
அந்த வகையில், நான் தவறு செய்துவிட்டேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் அத்தோடு மன்னிக்கவும் நான் அந்த கதிரையில் அமருவேன் என நானே எதிர்பார்க்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.