Home இலங்கை சமூகம் கடலில் நீராடிய மருத்துவருக்கு நேர்ந்த கதி

கடலில் நீராடிய மருத்துவருக்கு நேர்ந்த கதி

0

மாத்தறை மிரிஸ்ஸா கடற்கரை அருகே கடலில் நீராடிக் கொண்டிருந்த போது 49 வயதுடைய மருத்துவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மருத்துவர் மீட்கப்பட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர் வெலிகம – வலானா வைத்தியசாலையின் பிரதான மருத்துவ அதிகாரி (Chief Medical Officer) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே அவர் வலானா வைத்தியசாலையில் தனது பணிகளைப் பொறுப்பேற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறது.   

NO COMMENTS

Exit mobile version