Home இலங்கை குற்றம் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு வைத்தியரால் நேர்ந்த கதி

சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு வைத்தியரால் நேர்ந்த கதி

0

கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ மாவட்ட வைத்தியசாலையில் 26 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயதுடைய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநோயாளர் பிரிவைச் சேர்ந்த வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக கஹதுடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை சென்றுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம்

இதன்போது சந்தேக நபரான வைத்தியர், மற்ற நோயாளிகளின் சிகிச்சையை புறக்கணித்து, முறைப்பாட்டாளரான பெண்ணின் மருத்துவ பதிவுகளை பரிசோதித்துள்ளார்.

மேலும் உடல் ரீதியாக அவரை பரிசோதிக்க அறை ஒன்றிக்குக்கு அழைத்துச் சென்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டிற்கு குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version