Home இலங்கை குற்றம் கனடாவில் வசிக்கும் இலங்கையரின் மோசமான செயல்: உண்மையை அம்பலப்படுத்திய பெண்

கனடாவில் வசிக்கும் இலங்கையரின் மோசமான செயல்: உண்மையை அம்பலப்படுத்திய பெண்

0

கனடாவில் இருந்து இலங்கையில் ஒன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா வாழ் இலங்கையரின் வர்த்தக நடவடிக்கை அம்பலமாகி உள்ளது.

கடந்த 22 ஆம் திகதி வத்தளை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பெண் 25 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.


போதைப்பொருள் கடத்தல்

விசாரணையின் போது, ​​அவருக்கு போதைப்பொருளை வழங்கிய மற்றொரு நபர் வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அவர் முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளார். சந்தேக நபரிடம் 115 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தன்னை வழிநடத்துவதாக போதைப்பொருள் கடத்தல்காரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் வாங்குபவர்கள் கனடாவில் உள்ள நபருக்கு ஒன்லைன் மூலம் பணம் செலுத்துவர். அதன் பின்னர் கனடாவில் இருந்து வரும் தகவலுக்கு அமைய உரிய நபர்களுக்கு போதைப்பொருளை வழங்குவதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிசறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 7 நாள் பொலிஸில் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version