Home முக்கியச் செய்திகள் வைத்தியசாலைக்குள் மீட்கப்பட்ட தோட்டாக்கள் : வேலை நிறுத்தத்தில் குதித்த மருத்துவர்கள்

வைத்தியசாலைக்குள் மீட்கப்பட்ட தோட்டாக்கள் : வேலை நிறுத்தத்தில் குதித்த மருத்துவர்கள்

0

அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து இன்றையதினம்(17)வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 நாட்களுக்கு முன்பு அனுராதபுரம் போதனா மருத்துவமனை வளாகத்தில் பல வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சிக்கல்கள் இருப்பதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு வழங்க கோரி வேலை நிறுத்தம்

அதன்படி, அனுராதபுரம் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலை தங்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version