Home முக்கியச் செய்திகள் தென்னிலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் – குடும்பத்தை காப்பாற்றிய நாய்

தென்னிலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் – குடும்பத்தை காப்பாற்றிய நாய்

0

களுத்துறை (Kalutara) – கமகொட பகுதியில் நாய் ஒன்று முழு குடும்பத்தையும் காப்பாற்றிய நெகிழ்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெய்த கடும் மழையுடன் கூடிய காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வீடு முற்றாக இடிந்துள்ள நிலையிலும் வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

கூரையின் மீது மரத்தின் கிளை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வளர்ப்பு நாய் அதிகாலையில் வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கு சென்று நுளம்பு வலையையும் அவர்கள் அணிந்திருந்த ஆடையையும் கடித்து இழுத்து எழுப்பியுள்ளது.

வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி வெளியே அழைத்து வெளியே வந்து சில நிமிடங்களின் மரத்தின் கிளை வீட்டின் கூரையின் மீது விழுந்ததில் அவர்களின் கட்டிலின் மீது விழுந்துள்ளது.

நாயின் இந்த செயற்பாட்டால் வீட்டில் இருந்த உரிமையாளர்கள் அனைவரும் பேராபத்தில் இருந்து தப்பித்துள்ளனர். 

சீரற்ற காலநிலையால் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version