Home இலங்கை பொருளாதாரம் வேகமாக அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

வேகமாக அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

0

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(17.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்  வீழ்ச்சியடைந்து வருகின்றது.  

கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில் நேற்றும் இன்றும்   ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  

மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (17.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  305.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை   295.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை  222.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.83 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  380.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  365.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் ரூபா சம்பளம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version