Home இலங்கை பொருளாதாரம் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

0

தற்போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவிவருவதாக பரவலாக பேசப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தேர்தல் பரப்புரைக்கூட்டமானது நேற்று (23) உவர்மலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாடு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை
போதுமான அளவில் அரிசி கையிருப்பு இருக்கின்றது.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் அதன்
மூலமாக நாட்டு மக்களுக்கு அரிசியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுமனே சுற்றுலாத்துறை சார்ந்த தேவைகளுக்காக மாத்திரமே அரிசியினை இறக்குமதி
செய்வதற்கான திட்டங்களும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

விவசாயிகளுக்கான மானியம், கடற்றொழிலாளர்களுக்கான மானியம் மற்றும் அரச
உத்தியோகத்தர்களது கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version