Home இலங்கை பொருளாதாரம் டொலரின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி

டொலரின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி

0

கடந்த திங்கட் கிழமையுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(24.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  305.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை  295.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 224.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.37 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  381.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  366.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version