Home இலங்கை பொருளாதாரம் வேகமாக உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி

வேகமாக உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி

0

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(20.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.  

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (20.06.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 227.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 217.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  321.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 395.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  380.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த சில மாதங்களாக அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 300 ரூபாவுக்கு கீழ் பதிவாகியிருந்த நிலையில் இன்றையதினம் மீண்டும் 300 ரூபாவை அடைந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version