இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14.07.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.92 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய நிலவரம்
இதேவேளை நேற்றைய தினம் (13) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.48 ரூபாவாக காணப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Source: https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1784010494
