Home இலங்கை பொருளாதாரம் மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! உலக சந்தையில் சடுதியாக உயர்ந்த எரிபொருள் விலை

மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! உலக சந்தையில் சடுதியாக உயர்ந்த எரிபொருள் விலை

0

மத்தியக் கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.

இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இன்றையதினம் மீண்டும் 9 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மீண்டும் அதிகரித்த விலை

பிரென்ட்  கச்சா எண்ணெய் ஒரு பரலின் விலை 7.29 டொலர்களால் அதிகரித்து  83.30 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 

அத்துடன் WTI கச்சா எண்ணெய் ஒரு பரலின் விலை 6.73 டொலர்களால் அதிகரித்து 78.30 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.  

பிரென்ட்  கச்சா எண்ணெய்யின்  இன்றைய விலை உயர்வானது, கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு பிறகு பதிவான அதிகரித்த ஒரு நாள் விலையாகும்.   

அத்துடன், ஜூன் மாதம் 12ஆம்  திகதிககுப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையும் இதுவே ஆகும்.

 

Source: https://tamilwin.com/article/crude-oil-price-today-1783997643

NO COMMENTS

Exit mobile version