Home முக்கியச் செய்திகள் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை

மாலை அல்லது இரவு வேளையில்  பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு  அறிவுருத்தப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/today-weather-report-sl-tamil-meteorology-1729557602?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version